பஜாஜ் பல்சர் என்எஸ்200 புதிய வேரியண்ட்

பல்சர் என்எஸ்200 மோட்டார்சைக்கிள் மாடலின் பியூயல் இன்ஜெக்க்ஷன் வேரியண்ட்டை பஜாஜ் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. இப்புதிய வேரியண்ட் வரும் தீபாவளி சமயத்தில் விற்பனைக்கு  அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. இந்தியாவை சேர்ந்த பஜாஜ் நிறுவனம் தற்போது பல்சர் ஆர்எஸ்200 மாடலில் வழங்கப்பட்டு வரும் பியூயல் இன்ஜெக்க்ஷன் இன்ஜினை, விரைவில் அமலுக்கு வரவுள்ள பிஎஸ்-6 மாசு உமிழ்வு  விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில் அப்டேட் செய்ய உள்ளது.அத்துடன், அதே இன்ஜினை, இந்திய மார்க்கெட்டிற்கான பல்சர் என்எஸ்200 பைக்கிலும் பஜாஜ் நிறுவனம் பயன்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய நிலையில் பஜாஜ் பல்சர் என்எஸ்200 மாடலில், 199.5 சிசி, சிங்கிள்  சிலிண்டர், லிக்யூட் கூல்டு, கார்புரேட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. முன்னதாக, பஜாஜ் நிறுவனம் சர்வதேச மார்க்கெட்களுக்கான பல்சர் என்எஸ்200 பைக்கில், பியூயல் இன்ஜெக்க்ஷன் வேரியண்ட்டை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.  இது, பலருக்கும் தெரியாத ஒரு விஷயமாகும்.

Advertising
Advertising

சர்வதேச மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் பல்சர் என்எஸ்200 பைக்கில், 199.5 சிசி எஸ்ஓஎச்சி 4-வால்வு, லிக்யூட் கூல்டு, டிரிபிள் ஸ்பார்க் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 9,750 ஆர்பிஎம்மில் 24.13 எச்பி  பவரையும், 8,000 ஆர்பிஎம்மில் 18.6 என்எம் டார்க் திறனையும் உருவாக்கக்கூடியது. அதே சமயம், இந்திய மார்க்கெட்டிற்கான பல்சர் என்எஸ்200 மாடல் அதிகபட்சமாக 23.17 எச்பி பவரையும், 18.3 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். இரண்டு  மாடல்களிலும், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்திய மார்க்கெட்டிற்கான பல்சர் என்எஸ்200 மாடலில், இன்ஜின் மேம்படுத்தப்படுவதோடு மட்டுமல்லாது, சிறிய அளவிலான விஸ்வல் அப்டேட்களும் செய்யப்படும் என  எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் புதிய பெயிண்ட் ஸ்கீம் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இதுதவிர, புதிய முழு எல்இடி ஹெட்லேம்ப் செட் அப் வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், தற்போது உள்ள செமி அனலாக்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்ட்டருக்கு பதிலாக முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்ட்டர் வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. விலை விவரம் அறிவிக்கப்படவில்லை.

Related Stories: