அந்நிய செலாவணி கையிருப்பு அபாரம்

மும்பை: அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த 7ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் 168.6 கோடி டாலர் உயர்ந்து 42,355.4 கோடி டாலர் ஆகியுள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் கையிருப்பு 187.5 கோடி டாலர் உயர்ந்து 42,186.7 கோடி டாலராக இருந்தது.  கடந்த 2018 ஏப்ரல் மாதம் கையிருப்பு 42,602.8 கோடி டாலர் என்ற வாழ்நாள் உச்சத்தை எட்டியது. தற்போது மீண்டும் இதே அளவை நெருங்கியுள்ளது. தங்கம் கையிருப்பு மாற்றமின்றி 2,295.8 கோடி டாலராக உள்ளது. சர்வேச நிதியத்தில் கையிருப்பு 1.4 கோடி டாலர் உயர்ந்து 333.45 கோடி டாலராக உள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: