ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியா - கிர்கிஸ்தான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது

பிஷ்கெக்: பிரதமர் மோடி முன்னிலையில், இந்தியா - கிர்கிஸ்தான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகளை உள்ளடக்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 2 நாள் மாநாடு, கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஷ்கெக்கில் நேற்று தொடங்கியது. மாநாடு இன்றும் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, நேற்று பிஷ்கெக் சென்றார்.

தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, பல நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி முதல் முறையாக பங்கேற்கிறார். உறுப்பு நாடுகளை தவிர்த்து ஆப்கானிஸ்தான்,ஈரான் மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.இந்நிலையில் பிரதமர் மோடி, கிர்கிஸ்தான் அதிபர் சூரன்பே ஜீன்பெகோவ் முன்னிலையில் இந்தியா - கிர்கிஸ்தான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த போது, பிரதமர் மோடி தெரிவித்ததாவது: தீவிரவாதத்திற்கு எதிராக பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிராக இருநாடுகளும் கூட்டாக போராடும். எந்த நிலையிலும் பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ள முடியாது என்பதையை உலகுக்கு உணர்த்துவது அவசியமானது. இதையடுத்து மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்கள் விருந்தின் போது பரஸ்பரம் காலம் விசாரித்து பேசி கொண்டு இருந்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை இந்திய பிரதமர் மோடி சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை எனவும், பரஸ்பரம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: