மேற்குவங்கத்தில் நெருக்கடியை தீர்க்க தனிப்பட்ட முறையில் முயற்சி மேற்கொள்ளுங்கள் மம்தாவிற்கு சுகாதாரத்துறை அமைச்சர் வேண்டுகோள்

டெல்லி : மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.மேற்குவங்கத்தில் மருத்துவர்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு  வருகின்றனர். அதனால் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் மேற்குவங்க மருத்துவர்களுக்கு ஆதரவாக மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தற்போதைய நெருக்கடியை தீர்க்க தனிப்பட்ட முறையில் இப்பிரச்சனையை கையாண்டு முடிவுக்கு கொண்டுவர வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இந்த பிரச்சனையில் மருத்துவர்களை சமாதானப்படுத்துவதை விட்டு அவர்களை மிரட்டுவதால் போராட்டம் முடிவுக்கு வராது என்றும் அவர்களுடன் பேசி பிரச்சனை சுமுகமாக தீர்க்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

alignment=

உலகிலே தலைசிறந்த மருத்துவர்களை கொண்ட நாடு நாம் நாடு , மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது நமது கடமை என்றும் இப்பிரச்னையில் இந்திய அரசாங்கம் உங்களுக்கு துணை நிற்கும் என்றும் என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய தயராக இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: