அந்நிய நேரடி முதலீடு 6 சதவீதம் உயர்வு

புதுடெல்லி: அந்நிய நேரடி முதலீடு கடந்த ஆண்டில் 6 சதவீதம் உயர்ந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. உலக முதலீட்டு அறிக்கை 2019-ஐ ஐ.நா வெளியிட்டுள்ளது. இதில் உலக அளவில் அந்நிய நேரடி முதலீடு 2018ல் 13 சதவீதம் சரிந்துது 1.3 லட்சம் கோடி டாலராக உள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில் இது 1.5 லட்சம் கோடி டாலராக இருந்தது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் 4,200 கோடி டாலர் அந்நிய நேரடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. உற்பத்தி, தகவல் தொடர்பு, நிதிச்சேவைகள் துறைகளில் முதலீடுகள் அதிகமாக மேற்ெகாள்ளப்பட்டுள்ளன. இதுவே அந்நிய நேரடி முதலீடு அதிகரிக்க முக்கிய காரணம் என ஐ.நா தெரிவித்துள்ளது.

Related Stories: