அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவியேற்க வாருங்கள் எடப்பாடியாரே... அப்போ ஓ.பன்னீர்செல்வத்தின் நிலை...

சென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவியேற்க வாருங்கள் எடப்பாடியாரே என்று அதிமுக தலைமையகம் அருகில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் படுதோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சியின் தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

அதிமுகவுக்கு இரட்டை தலைமை தேவையில்லை, ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, குன்னம் தொகுதி எம்எல்ஏ ராமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் குரல் கொடுத்துள்ளனர். அமைச்சர் சி.வி.சண்முகமும் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால்தான் அதிமுக தோல்வி அடைந்தது என்று பகிரங்கமாகவே குற்றம் சாட்டி வருகிறார்.

பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதற்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு நிர்வாகிகள் வருகை தந்துள்ளனர். கூட்டத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். இந்நிலையில் தலைமை அலுவலம் அருகில் பொதுச்செயலாளர் எடப்பாடியார் வருக என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு இல்லை

அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சற்றுநேரத்தில் தொடங்கவுள்ள நிலையில், அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கலைச்செல்வன், பிரபு மற்றும் இரத்தினசபாபதி ஆகியோருக்கு அழைப்புவிடுக்கவில்லை. அழைப்பு வராததால் பங்கேற்கவில்லை என எம்.எல்.ஏ.க்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு விளக்கம் அளித்துள்ளனர்.

ஆர்.டி.ராமச்சந்திரன் பங்கேற்கவில்லை

சென்னையில் இன்று நடைபெறும் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும் குன்னம் எம்எல்ஏ-வுமான ஆர்.டி.ராமச்சந்திரன். பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தான் உடல் நடல்நலக்குறைவால் கேரளா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை  என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: