ஜெகன்மோகன் ரெட்டியை வளைக்க பாஜக தீவிரம்... ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு துணை சபாநாயகர் பதவி?

புதுடெல்லி: நாடாளுமன்ற துணை சபாநாயகர் பதவி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவ், பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா, பிரதிநிதியாக ஜெகன்மோகனை வி்ஜயவாடாவில் நேற்று சந்தித்தார்.

Advertising
Advertising

அப்போது துணை சபாநாயகர் பதவி வழங்குவது குறித்து அவரிடம் கூறினார். ஆனால் அதற்கு எவ்வித பதிலும் கூறாத ஜெகன்மோகன் ரெட்டி, கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு செய்ய இருப்பதாக கூறியதாக தெரிகிறது.

ஆந்திராவில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்களின் முழு ஆதரவுடன் வெற்றி பெற்றிருப்பதால் துணை சபாநாயகர் பதவியை ஏற்க ஜெகன்மோகன் ரெட்டி தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. ஆனால் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுக்கு எதிரான அரசியல் நகர்வாக ஜெகன்மோகன் ரெட்டியை வளைத்து போட பாஜக தலைமை தீவிரம் காட்டி வருகிறது.

Related Stories: