உலகக்கோப்பை கிரிக்கெட்; ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி

லண்டன்: லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இன்றைய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 36 ரன் வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகப்பட்சமாக ஷிகர் தவான் 109 பந்துகளுக்கு 117 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 77 பந்துகளுக்கு 82 ரன்களும், ரோகித் சர்மா 70 பந்துகளுக்கு 57 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 27 பந்துகளுக்கு 48 ரன்களும், டோனி 14 பந்துகளுக்கு 27 ரன்களும் எடுத்தனர்.

இதனை தொடர்ந்து 353 வெற்றி இலக்காக கொண்டு ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 316 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்திய அணி 36  ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியில் அதிகப்பற்றமாக ஸ்டிவன் ஸ்மித் 69 ரன்கள், டேவிட் வார்னர் 56 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி சார்பில் புவனேஷ்வர் குமார், பும்ரா தலா 3  விக்கெட்களும், சஹால் 2 விக்கெட் எடுத்தனர்.

Related Stories: