நடிகர் பாக்யராஜ் தலைமையிலான அணிக்கு சுவாமி சங்கரதாஸ் அணி என பெயர் சூட்டப்பட்டது

சென்னை: நடிகர் பாக்யராஜ் தலைமையிலான அணியின் பெயர் சுவாமி சங்கரதாஸ் அணி என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் வேட்புமனுத் தாக்கல் நேற்று முதல் துவங்கியது. நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி மீண்டும் போட்டியிடும் நிலையில் அந்த அணி சார்பில், பொதுச் செயலாளர் விஷால், துணைத்தலைவர் பூச்சி முருகன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பலர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், விஷால்  தலைமையிலான பாண்டவர் அணியை எதிர்த்து நடிகர் பாக்யராஜ் போட்டியிடுகிறார். இன்று நடிகர் சங்க தலைவர் தேர்தலில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ் வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து, நடிகர் பாக்யராஜ் தலைமையிலான அணியின் பெயர் சுவாமி சங்கரதாஸ் அணி என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: