கேங்மேன் பதவி தொடர்பாக பேச்சு அமைச்சர் தங்கமணி மீது வழக்கு: தொழிற்சங்கத்தினர் முடிவு

சென்னை: கேங்மேன் பதவி தொடர்பாக மின் துறை அமைச்சர் தங்கமணி பேசி வரும் நிலை, அவர் மீது தொழிற்சங்கத்தினர் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: உயர் நீதிமன்றத்தில் கேங்மேன் பதவி தொடர்பான வழக்கு கடந்த ஏப்ரல் 24ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறுவதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் புதிய பணி நியமனம் தொடர்பாக எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு போன்ற எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்கக்கூடாது என்று மின்வாரியத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வழக்கு ஜூன் மாதத்தில் விசாரணைக்கு வரும் அதுவரை கேங்மேன் பதவி தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க கூடாது என்ற நிலையில் மின்துறை அமைச்சர் இப்பதவி தொடர்பாக பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தொழிற்சங்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. மின்வாரியத்தில் வெளி மாநிலத்தவர்களை பணியில் அமர்த்தியதற்கு நீதிமன்ற உத்தரவை காரணம் கூறும் மின்துறை அமைச்சர்,  அதே நீதிமன்றம் தான்  பல லட்சம் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று கடந்த 24-04-2018 ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது.  ஆனால் தற்போது வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Related Stories: