சென்னை: வணிகவரித்துறை ஆணையர் சோமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக வணிகவரித்துறையில் மின்னணு முறையில் நமூனாக்கள் சமர்ப்பிக்க உதவுவதற்காக சென்னையிலும் கோவையிலும், இலவச சேவை மையம் துவங்கப்பட்டுள்ளது.வரி செலுத்துவோர்கள், சரக்குகள் மற்றும் சேவைகள் வரி இணையத்தில் தாங்கள் சமர்ப்பிக்க வேண்டிய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி தொடர்பான மாதாந்திர நமூனாக்கள் மற்றும் இதர மின்னணு மனுக்களை சமர்ப்பிக்க இந்த சேவை மையத்தின் உதவியை எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.