தமிழகத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி,..தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தொழில்வளர்ச்சி, வேலைவாய்ப்பு அதிகரிக்க நடவடிக்கை என்று தமிழக அரசு  அரசாணையில் கூறியுள்ளது. பெண் பணியாளர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அரசாணை வெளியிட்டுள்ளது. வாரத்தின் 7 நாட்களிலும் கடைகள் இயங்க அரசாணை மூலம் அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணையிட்டுள்ளது.  ஊழியருக்கு நாளுக்கு 8 மணி நேரம், வாரத்திற்கு 48 மணி மட்டுமே பணி செய்ய வேண்டும் என்று அரசாணை வெளியிட்டுள்ளது. கூடுதல் நேரம் தேவையெனில் 10.30 மணி நேரத்திற்கு மேல் பணி வழங்க கூடாது என்று கூறப்பட்டுள்ளது.  கடைகள், தொழில் நிறுவனங்கள், உணவகம், விடுதிகள், திரையரங்குகள் 365 நாட்களும் திருந்திருக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்த புதிய நடைமுறை அமலில் இருக்கும் என்று  அரசாணையில்  கூறப்பட்டுள்ளது.

பெண்கள் இரவில் பணி செய்வதாக இருந்தால் எழுத்துப்பூர்வமான அனுமதி தேவை என்று  கூறப்பட்டுள்ளது. கடந்த 2016 ம் ஆண்டு கடைகள், நிறுவனங்களின் பணி ஒழுங்குமுறை மற்றும் தேவைக்கான நிபந்தனைகள் குறித்த  சட்டமசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியிருந்தது. அதன் அடிப்படையில் .கடைகள், தொழில் நிறுவனங்கள், உணவகம், விடுதிகள், திரையரங்குகள் 365 நாட்களும் திருந்திருக்கலாம் என்று கூறியிருந்தது. இதனை மாநிலங்கள் அவர்கள்  நடைமுறைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தது. இதனை முதன் முதலாக மகாராஷ்ட்ரா மாநிலம் 2018 ம் ஆண்டு அமல்படுத்தியது. இதனை அடுத்து தமிழகத்திலும் நடைமுறைப்படுத்தி தமிழக அரசு அரசாணை  வெளியிட்டுள்ளது.

Related Stories: