தேர்தல் முடிவுகள் எதிரொலி... அதிமுக பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்களுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை

சென்னை: இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து அதிமுக பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் மாவட்ட செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 18 தொகுதி இடைத்தேர்தலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18 -ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது.

வேலூரில் மட்டும் பணப்பட்டுவாடா புகார் எதிரொலியாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதே போல் தமிழகத்தில் மற்ற 4 தொகுதி இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடத்தப்பட்டது. இதன் வாக்கு எண்ணிக்கை மே 23-ம் நடைபெற்றது. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 352 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.

இதில், பாஜ மட்டும் 303 இடங்களுடன் தனிப்பெரும்பான்மை வெற்றி பெற்றது. இதன் மூலம், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சியை தக்க வைத்தது. ஆனால் தமிழகத்தை பொறுத்த வரையில் திமுக தலைமையிலான கூட்டணி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இடைத்தேர்தலில் 13 இடங்களில் திமுக வெற்றி பெற்றது. ஆனால் அதிமுக மக்களவை தேர்தலில் 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.

தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டுமே வெற்றி பெற்றார். அதே போல இடைத்தேர்தலிலும் அதிமுக போட்டியிட்ட 22 இடங்களில் வெறும் 9 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில் இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து அதிமுக பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories: