காரைக்குடி மக்கள் அவதி : விபத்துகளை ஏற்படுத்தும் பாதாளச்சாக்கடை குழிகள்

காரைக்குடி :  காரைக்குடியில் 36 வார்டுகளிலும் பாதாளச் சாக்கடை பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு  முன்பு தொடங்கப்பட்டது. பாதாளச் சாக்கடைக்காக வெட்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் கிடக்கின்றன. இதனால் இரவில் நடந்து செல்பவர்களும், வாகன ஓட்டிகளும்,  தடுமாறி அந்த பள்ளத்திற்குள் விழுந்து படுகாயமடைந்து வருகின்றனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பாக காரைக்குடி கழனிவாசல் புதுரோடு பகுதியில் இரவு நேரத்தில் சென்ற முதியவர் குழிக்குள் விழுந்து பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார். அதேபோல் இரவு ரயில்வே பீடர் ரோடு பகுதியில் இரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் பாதாளச்சாக்கடை குழிக்குள் விழுந்து பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் கூறுகையில், `` எங்கள் பகுதியில் மேற்கொள்ளப்படும் பாதாளச்சாக்கடை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. ரோட்டின் பல பகுதிகளில் பாதாளச்சாக்கடைக் குழிகள் இன்னும் மூடப்படாமல் உள்ளது. இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் பலர் உள்ளே விழுந்து படுகாயமடைந்து வருகின்றனர். இதுபோன்ற விபத்துக்கள் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க குழிகளைச் சுற்றி பேரிகாட்  அமைக்க வேண்டும். பணிகளை  விரைந்து முடித்து குழிகளை மூடவேண்டும்’’ என்றார்.

Related Stories: