அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கு தனியார் நிகழ்ச்சி நடத்த வாடகைக்கு விடப்படும் : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: அண்ணா நூற்றாண்டு நுலகத்தில் உள்ள கலையரங்கு, தனியார் நிகழ்ச்சிகள் நடத்த வாடகைக்கு விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் பொது நூலக இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:  கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் சுமார் 8 ஏக்கர் நிலப்பரப்பில் 3.75 லட்சம் சதுர அடியில் 8 மாடிகளை கொண்டது. இந்த நூலக வளாகத்தில் 1,280 பேர் அமரலாம்.  

இந்த கலையரங்கத்தில் அரசால் அனுமதிக்கப்படும் நிகழ்ச்சிகளின் பயன்பாட்டிற்கு அரசு விதிகளின்படி வாடகைக்கு விடப்படும்.  இந்த கலையரங்கத்திற்கான ஒரு நாள் வாடகையாக ரூ.2,31,224 என அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கலாச்சார பண்பாடு நிகழ்ச்சிகள் மற்றும் புத்தக வெளியீடுகள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு மட்டும் நிர்ணயம் செய்யப்பட்ட ஒருநாள் வாடகை கட்டத்தில் 60 சதவீதம் தொகை தள்ளுபடி வழங்கப்பட்டு, ஒரு நாள் வாடகையாக ரூ.92,490 அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 044-22201033, 9003212156 என்ற தொலைபேசி எண்ணில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

Related Stories: