கிராம கட்டுப்பாட்டை மீறி சடங்குகள் செய்யாதவர்களுக்கு வலுக்கட்டாயமாக மொட்டை: ஜார்கண்டில் 6 பேர் கைது

ஜாம்ஜெட்பூர்: கிராம கட்டுப்பாடுகளை மீறியதற்காக வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு வலுக்கட்டாயமாக மொட்டை அடிக்கப்பட்டுள்ளது.   

ஜார்கண்ட் மாநிலம் சராய்கேலா-கர்சவான் மாவட்டத்தில் சோட்டா கிருஷ்ணாபூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு யாராவது ஒருவர் இறந்தால், அந்த கிராமத்தில் உள்ள அனைத்து ஆண்களும் மொட்டை அடித்துக் கொள்வது வழக்கம்.

பெண்கள் நகங்களை வெட்டிக் கொள்வர். இங்கு சமீபத்தில் ஒருவர் இறந்தார். ஆனால் இங்குள்ள 12 குடும்பத்தைச் சேர்ந்த 16 ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த சடங்கை பின்பற்றவில்லை. நாங்கள் ‘குரு மா’-வை வழிபடுபவர்கள், கோயிலுக்கு செல்வதில்லை. அதனால் இந்து சடங்குகளை நாங்கள் பின்பற்றுவதில்லை என கூறியுள்ளனர். இதற்கு அந்த கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அந்த கிராமத்தில் பஞ்சாயத்து நடந்துள்ளது. கிராம கட்டுப்பாட்டை மீறியதாகவும், சூனிய வேலைகளில் அவர்கள் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி, 9 ஆண்களுக்கு வலுக்கட்டாயமாக மொட்டை போட்டுள்ளனர், 7 பெண்களுக்கு நகங்கள் வெட்டப்பட்டன. இதுகுறித்த புகாரின் பேரில், சோட்டா கிருஷ்ணாபூர்  கிராமத்தைச் சேர்ந்த 6 பேரை ஜார்கண்ட் போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories: