ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்ய செயலிகளை பயன்படுத்தாமல், கூகுள் தேடு பொறியிலேயே ஆர்டர் செய்யும் வசதி விரைவில் அறிமுகம்

டெல்லி: ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்ய செயலிகளை பயன்படுத்தாமல், கூகுள் தேடு பொறியிலேயே ஆர்டர் செய்யும் வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது. வாடிக்கையாளர்களை எண்ணற்ற செயலிகளை தரவிறக்கம் செய்வதிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு கூகுள் நிறுவனம் இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதனால் கூகுள் சர்ச், கூகுள் அசிஸ்டண்ட் ஆகியவற்றை பயன்படுத்தி எளிதில் உணவை ஆர்டர் செய்து கொள்ளலாம்.

இதற்காக கூகுள் நிறுவன செயலிகள் அனைத்திலும் “ஆர்டர் ஆன்லைன்” என்ற புதிய பட்டன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆர்டர் செய்த உணவுக்கான தொகையை, ஆன்லைன் மூலமும், கூகுள் பே செயலி மூலமாகவும் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக தூர்தர்ஷ், போஸ்ட்மேட்ஸ், டெலிவரி.காம், ஸ்லைஸ் மற்றும் சௌவ்நவ் நிறுவனங்களின் உணவு டெலிவரி சேவைகள் கூகுளில் வழங்கப்படவுள்ளது.

Related Stories: