பதவியேற்ற பிறகு நான் ரொம்ப பிஸி... கிர் கிஸ்தான், ஜப்பான், பிரான்ஸ், ரஷ்யா,நியூயார்க் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி

புதுடெல்லி: பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண திட்டங்கள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி 2-வது முறை பதவியேற்ற பின் முதன் முறையாக ஜுன் 13-ம் தேதியில் இருந்து 15-ம் தேதி வரை கிர்கிஸ்தானில் நடைபெறும் SCO மாநாட்டில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் 17வது மக்களவை தேர்தல் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி கடந்த 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது.

மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில், வேலூரில் மட்டும் பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மீதமுள்ள 542 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. அதில்  350 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது.

இந்நிலையில் இன்று மாலை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். மேலும் வரும் 30-ம் தேதி பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளார். இந்த நிலையில் பிரதமர் மோடி மேற்கொள்ள வெளிநாட்டு சுற்று பயணங்கள் பற்றிய அறிவிப்பை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டு பயண விவரம்;

ஜுன் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை கிர் கிஸ்தானில் நடைபெறும் SCO மாநாட்டில் மோடி கலந்து கொள்கிறார்.

ஜுன் 28, 29-ம் தேதிகளில் ஜப்பானில் நடைபெறும் ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்கிறார்

ஆகஸ்ட் கடைசி வாரத்தில் பிரான்ஸ்க்கு செல்கிறார்

செப்டம்பர் முதல் வாரத்தில் ரஷ்யா செல்கிறார்

செப்டம்பர் 3-வது வாரத்தில் நியூயார்க் செல்கிறார்

நவம்பர் 4-ம் தேதி பாங்காங்க் செல்கிறார்

நவம்பர் 11-ம் தேதி பிரேசில் செல்ல உள்ளார்

Related Stories: