இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது: அனைவரும் ஒன்றினைந்து வலுவான இந்தியாவை உருவாக்குவோம்; பிரதமர் மோடி

புதுடெல்லி: பாஜக பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில் இந்தியா மீண்டும் வெற்றி பெற்றதாக பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அனைவரும் ஒன்றினைந்து வலுவான இந்தியாவை உருவாக்குவோம் என்று மோடி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் பாஜக 343 இடங்களிலும், காங்கிரஸ் 90 இடங்களிலும், மற்றவை 105 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. நாடாளுமன்றத்தின் 17வது மக்களவை தேர்தல் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி கடந்த 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில், வேலூரில் மட்டும் பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மீதமுள்ள 542 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி 344 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 89 இடங்களிலும், மற்றவை 109 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளதால் பிரதமராக மீண்டும் நரேந்திர மோடி தேர்வாகிறார். இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர், உலக அரசியல் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அமித் ஷா - நாட்டு மக்களுக்கு நன்றி

பாஜக பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில் அக்கட்சியின் தலைவர் அமித் ஷா நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஜெகன் மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக்கிற்கு வாழ்த்து

ஆந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதற்கு பிரதமர் மோடி வாழ்த்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதே போல் ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றி பிஜூ ஜனதா தள கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் தொடர்ந்து 5 வது முறையாக ஆட்சியமைக்கிறார். இதற்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories: