பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்ததால் கைதான வக்கீலை விடுவிக்க கோரி, மனைவி மனு, பெரம்பலூர், கலெக்டருக்கு ஐகோர்,ட் நோட்டீஸ்

சென்னை:  பெரம்பலூரில் இளம்பெண்கள் பலரிடம் அ.தி.மு.க. பிரமுகர் மற்றும் சிலர், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், வக்கீலுமான அருள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தார்.  இதுதொடர்பாக பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார்  பிரிவுகளில் வழக்குபதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் பெரம்பலூர் வக்கீல்கள் நல சங்கத்தை சேர்ந்த வக்கீல்கள் கொடுத்த புகாரின்பேரில் மார்ச் 0ம் தேதி பெரம்பலூர் போலீசார் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வக்கீல் அருளை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் வக்கீல் அருளுக்கு ஜாமீன் கிடைத்தது. ஆனால், பாதிக்கப்பட்ட பெண் பேசியதாக, போலியான செல்போன் ஆடியோ வெளியிட்டதாக பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 2வதாக பதிவான வழக்கு தொடர்பாக, அவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கிலும் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. இந்நிலையில், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து,  தனது கணவரை விடுதலை செய்யக்கோரி அருளின் மனைவி தமிழரசி உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் டீக்காராமன், ஆதிகேசவலு ஆகியோர் பெரம்பலூர் கலெக்டர் 4 வாரங்களில் பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

Related Stories: