அமெரிக்காவில் ஸ்டீல் நிறுவனம் ஒன்றின் 21 மாடி கட்டிடம் 16 நொடிகளில் தகர்ப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஸ்டீல் நிறுவனம் ஒன்றின் 21 மாடி கட்டிடம் ஒன்று 16 நொடிகளில் தகர்க்கப்பட்டது. அமெரிக்காவின் 2வது பெரிய ஸ்டீல் உற்பத்தி நிறுவனமாக திகழ்ந்த பெத்லகேம் நிறுவனம் பென்சில்வேனியாவில் உள்ள 21 மாடி மார்ட்டின் டவரை தலைமையகமாக கொண்டு இயங்கி வந்தது. இந்த நிறுவனம் கடந்த 1972ம் ஆண்டு நிறுவப்பட்டது. அதன்பின்னர் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அந்த கட்டிடம் 16,000 டன் ஸ்டீல் மூலப்பொருட்களுடன் கடந்த 12 ஆண்டுகளாக பயன்பாடற்று இருந்தது. இந்தநிலையில் பழமைவாய்ந்த இந்த கட்டிடத்தை இடிக்க அதன் உரிமையாளர் முடிவுசெய்தார்.

Advertising
Advertising

அதன்படி கட்டிடங்களை தகர்க்கும் நிபுணர் குழு, வெடி வைத்து 21 மாடி கட்டிடத்தை 16 நொடிகளில் தகர்த்தினர். இதன் சத்தம், அதனைச் சுற்றி பல கிலோமீட்டர் தூரத்துக்கு கேட்டது. இதனை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் சிலர் கட்டிடம் நொறுங்குவதை தங்கள் செல்போன்களில் வீடியோ பதிவு செய்துள்ளனர். இந்த கட்டிடம் நொறுங்கிய வீடியோ காட்சியினை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளது. இதனை சமூக வலைத்தளங்களில் பார்ப்பவர்களும் அதிர்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

Related Stories: