தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் படுகொலை: முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு தொடங்கியது.

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு முதலானம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பலர் பல்வேறு இடங்களில் நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு மே மாதம் 22ம் தேதி தூத்துக்குடியில் துரோகக் கும்பல் சொந்த மக்களையே நரவேட்டையாடியது. நச்சு பரப்பும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதியாக போராடிய 13 பேரை கொன்று குவித்தனர்.

தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாக்குமரியில்  முதலானம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து ஆங்காங்கே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நெல்லையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை தூத்துக்குடியில் உள்ள கோயிகள் மற்றும் தேவாலயங்களிலும் பலியானவர்களுக்கு பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தூத்துக்குடி முழுவதும் அஞ்சலி செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்க புறப்பட்ட சுப. உதயகுமார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகர்கோவிலில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: