ரபேல் விமான விவகாரம்: காங்கிரஸ், நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை எதிராக தொடரப்பட்ட வழக்குகளை திருமப்பெற்றார் அனில் அம்பானி

டெல்லி: காங்கிரஸ் மற்றும் நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையின் ஆசிரியருக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை திரும்ப பெறுவதாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மக்களவைத்  தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி நடந்து முடிந்தது. இதனையடுத்து வருகிற மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தல் முடிந்து வெளியான கருத்து கணிப்பில் பா.ஜ மீண்டும்  ஆட்சி அமைக்கும் என கூறப்பட்டது. ஆனால் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காது. கருத்து கணிப்புகள் கூறும் அளவிற்கு மெஜாரிட்டி கிடைக்காது என்கிறார்கள். 2004 கருத்து கணிப்பு போல இந்த கணிப்பும் பொய்யாகவே வாய்ப்பு  இருக்கிறது. காங்கிரஸ் கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு உள்ளது என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதற்கிடையே, ரபேல் பைட்டர் ஜெட் விமானம் வாங்கியதில் அனில் அம்பானி நிறுவனம் ஊழல் செய்ததாக காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்ததோடு, நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையும் கட்டுரை வெளியிட்டிருந்தது. இதையடுத்து  ரிலையன்ஸ் தலைவர் அனில் அம்பானி மற்றும் அவரது குழுமம் மீது அவதூறு பரப்பியதாக, காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் குறிப்பிட்ட பத்திரிக்கை ஆசிரியர் மீது ரிலையன்ஸ் நிறுவனம் அகமதாபாத் நீதிமன்றத்தில், 5,000 கோடி ரூபாய்  இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பத்திரிக்கை ஆசிரியர் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெற அந்நிறுவனம் முடிவுசெய்துள்ளது. இதுகுறித்து  சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்து விட்டதாக ரிலையன்ஸ் குழுமத்தின் வழக்கறிஞர் ரஸேஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories: