எரிந்த காருக்கு இழப்பீடு தர மறுத்த இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு ₹2 லட்சம் அபராதம்: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தீ பிடித்து எரிந்த காருக்கு இழப்பீடு தர மறுத்த இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம்,  ராஜபாளையத்தை சேர்ந்தவர் சீனிவாச ராஜா. இவர் ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்து 736 மதிப்பில் ஒரு கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதற்கு ரூ.14,432 இன்சூரன்சும் செலுத்தியுள்ளார். மேலும் அனுமதி பெற்று, காரில் கேஸ் சிலிண்டர் பொருத்தியுள்ளார். இந்தநிலையில் கடந்த 2009ம் ஆண்டு பெட்ரோல் கசிவு காரணமாக கார் தீ பிடித்து எரிந்துள்ளது.

பின்னர் தீயணைப்பு வாகனம் வந்து தீயை அணைத்தது. இருந்தும் கார் முழுவதும் சேதமாகியது. இதையடுத்து சீனிவாசன் இன்சூரன்ஸ் கோரி விண்ணப்பிதிருந்தார். ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனம் பணம் தர மறுத்துள்ளது. மேலும் இவரது விண்ணப்பத்திற்கு எவ்வித பதிலும் அளிக்காமல் அலட்சியபடுத்தியுள்ளனர். இதனால் மன உைளச்சலுக்கு ஆளான சீனிவாசன் இழப்பீடு கோரி சென்னையில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நீதிபதி மோனி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இன்சூரன்ஸ் நிறுவனம் பதிலளிக்கையில், மனுதாரர் சீனிவாசன் காரில் கேஸ் பொருத்தியுள்ளார். அதனால்தான் தீ பிடித்துள்ளது. எனவே இதற்கெல்லாம் இழப்பீடு வழங்க முடியாது என்று தெரிவித்தனர். மனுதாரர் தரப்பு கூறுகையில் தவறாமல் இன்சூரன்ஸ் செலுத்தி வருவதாக தெரிவித்தார். மேலும் இன்சூரன்ஸ் பயன்பாட்டில் தான் உள்ளது என்று தெரிவித்தனர். இதையடுத்து நீதிபதி, காருக்கு ரூ.1லட்சத்து 67 ஆயிரத்து 388, மற்றும் மன உளைச்சலுக்கும் 35 ஆயிரம் வழக்கு செலவுக்கு ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்து 388 இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

Related Stories: