காப்புக்காட்டில் தீ

தாம்பரம்: மேற்கு தாம்பரம் - திருநீர்மலை சாலையில் உள்ள பர்மா காலனி அருகே கடப்பேரி மலை உள்ளது. இதனைச் சுற்றி பல ஏக்கர் பரப்பளவில் காப்புக் காடு உள்ளது. இந்நிலையில், நேற்று மதியம் இந்தக் காட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதுகுறித்து தாம்பரம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர். சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், ஒரு ஏக்கர் பரப்பளவில் இருந்த தைல மரங்கள் மற்றும் செடிகள் எரிந்து நாசமானது.

Related Stories: