நாட்டை வழிநடத்திய மிக பலவீனமான தலைவர் மோடி : பிரியங்கா காந்தி விமர்சனம்

லக்னோ: நாட்டை வழிநடத்திய மிக பலவீனமான தலைவர் மோடி என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த பிரியங்கா மோடியை தீர்மானமான வலிமையான தலைவராக ஊடகங்களும், பாரதிய ஜனதா கட்சியினரும் தான் சித்தரிக்கின்றனர் என்று கூறியுள்ளார். ஆனால் உண்மையில் நாட்டை வழிநடத்திய பலவீனமான தலைவர் மோடி என்று பிரியங்கா தெரிவித்தார். விவசாயிகள் டெல்லியில் பேரணி நடத்திய போது அவர்களை சந்திக்காமல் புறக்கணித்தவர் மோடி என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேடையில் முழங்கும் மோடி பொதுமக்களின் பிரச்சினைகளை ஒரு போதும் நேரில் கேட்டதில்லை என்று பிரியங்கா புகார் கூறியுள்ளார். கோட்சே தேச பக்தர் என்ற பிரக்யாவின் கருத்து தான் பாரதிய ஜனதா கட்சியின் பார்வையும் என்று பிரியங்கா விமர்சித்துள்ளார்.

பிரக்யா சிங்கை மன்னிக்கமாட்டேன் என்று மோடி கூறியதை சுட்டிக்காட்டிய பிரியங்கா, மோடி அனுமதி இல்லாமல் பிரக்யா நாடாளுமன்றத்திற்கு வேட்பாளராக இருக்க முடியும் என்று பிரியங்கா கேள்வி எழுப்பியுள்ளார். உத்திரபிரதேசத்தில் 2022-ம் ஆண்டில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக தேர்தலை எதிர்கொள்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த பிரியங்கா, கட்சி தமக்கு எந்த பொறுப்பை அளித்தாலும் அதனை நிறைவேற்றுவன் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

Related Stories: