தமிழகத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

மதுரை: குடிநீர் பிரச்சினை குறித்து நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்தார். மேலும் தமிழகத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தமிழகம் வழக்கமாகப் பெறும் மழையளவில் 69 சதவீதத்திற்கு மேல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

சென்னை மாநகருக்குக் குடிநீர் வழங்கும் ஆதாரங்களாக உள்ள பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் உள்ளிட்ட அனைத்து ஏரிகளும் வறண்டு போய் கிடக்கின்றன. ஒரு குடம் தண்ணீர் கூடக் கிடைக்காமல் தாய்மார்கள் குழாயடிகளில் காலிக்குடங்களுடன் “க்யூ” வரிசையில் கால் கடுக்கப் பல மணி நேரம் காத்து நிற்கும் நிலை உருவாகியுள்ளது.

அண்ணா பல்கலை கழகத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக சூரப்பா பேசியிருப்பது தவறானது என்று முதலமைச்சர் விளக்கம் அளித்தார். நீதிமன்றம் தெரிவித்துள்ளதால் கமல் பேச்சு குறித்து பேச விரும்பவில்லை என்று மதுரை விமான நிலையத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேட்டியளித்துள்ளார்.

Related Stories: