தமிழ்நாட்டில் ஜூன் 8, 9ம் தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு

சென்னை : தமிழக பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கான டெட் என்ற ஆசிரியர் தகுதி தேர்விற்காக அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஜூன் 8, 9ம் தேதிகளில் தேர்வு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. ஜூன் 8 முதல் நாளும், ஜீன் 9ம் தேதி இரண்டாம் தாளும் காலை 10 மணி முதல் 1 மணி வரை தேர்வு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே www.trb.tn.nic.in என்ற தளத்தில் ஆசிரியர் தகுதி தேர்விற்கு மார்ச் 15ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இணைதளம் சரிவர இயங்காததால் பலர் விண்ணப்பிக்க முடியவில்லை என புகார் எழுந்தது. இதையடுத்து விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்ரல் 5ம் தேதியில் இருந்து 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.

கடந்த முறை நடைபெற்ற தேர்வில் தோல்வியடைந்த 1,500 ஆசியர்களின் ஊதியத்தை தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனால் தற்போது நடைபெற உள்ள ஆசிரியர் தகுதி தேர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த முறை நடைபெற்ற தேர்வில் தோல்வியடைந்த ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் சிறப்பு தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் அடிப்படையில் கேள்விகள் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2013 மற்றும் 2017ம் ஆண்டில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. நீதிமன்ற வழக்கு காரணமாக கடந்தாண்டுக்கான தேர்வு நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: