ஈரான் எண்ணெய் இறக்குமதி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் டெல்லி வருகை

டெல்லி: ஈரான் எண்ணெய் இறக்குமதி தொடர்பான தடையிலிருந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா அளித்த விலக்கு முடிவடைந்துவிட்ட நிலையில், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரான் வெளியுறவு அமைச்சர் டெல்லி வந்துள்ளார். ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா அந்நாட்டிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியா, சீனா, தைவான், இத்தாலி, கிரீஸ் உள்ளிட்ட 8 நாடுகளுக்கு மட்டும் விலக்கு அளித்திருந்தது. இந்த விலக்கு மே ஒன்றாம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது.

அதேசமயம், அமெரிக்காவின் பொருளாதார தடைகளால் ஈரானின் சர்வதேச கச்சா எண்ணெய் வர்த்தகம் முடங்கி பொருளாதாரம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி வருவதாக அந்நாட்டு அதிபர் ஹசன் ரூஹானி கூறியுள்ளார். அமெரிக்காவின் அழுத்தத்தால் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியாவும் நிறுத்திவிட்டால் அந்நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என தெரிவித்தார். இந்நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜாவேத் ஷரீஃப் இந்தியா வந்துள்ளார். அவர் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜூடன் பேச்சு நடத்த உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

Related Stories: