வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு

திருவனந்தபுரம்: வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது. 19ம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும். வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில், மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறக்கிறார். அன்று  வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. மறுநாள் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை தினமும் கணபதி ஹோமம், உஷபூஜை, வழக்கமான பூஜைகளுடன் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகிய சிறப்பு பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து 5 நாட்களிலும் தினமும் காலை 5.30 மணி முதல் 10.30 மணி வரை நெய்யபிஷேகம் நடக்கிறது. வரும் 19ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படுகிறது. அத்துடன் வைகாசி மாத பூஜைகள் நிறைவுபெறும். உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து சபரிமலையில் இளம்பெண்கள் தரிசனத்துக்கு வர வாய்ப்பு உள்ளது. எனவே அசம்பாவிதம் தவிர்க்க போலீஸ் பாதுகாப்பும் போடப்படுகிறது.

Related Stories: