தீவிரவாதிகளை சுட்டுக் கொல்ல தேர்தல் ஆணையத்திடம் ராணுவ வீரர்கள் அனுமதி பெற வேண்டுமா?: பிரதமர் மோடி பேச்சு

குஷிநகர்: தீவிரவாதிகளை கொல்வதற்குக் கூட தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற வேண்டும் எனக் கூறுவார்களா? என பிரதமர் நரேந்திர  மோடி, எதிர்க்கட்சியினரை கடுமையாக சாடியிருக்கிறார். 6-ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று பீகாரில் 8, அரியானா 10,  ஜார்கண்ட் 4, மத்திய பிரேதசம் 8, உத்தர பிரதேசம் 14, மேற்கு வங்கம் 8, டெல்லியில் 7 என மொத்தம் 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு  தேர்தல் நடைபெற்று வருகிறது. இதையொட்டி பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் போலீசாரும், மத்திய படையினரும் தீவிரமாக ஈடுபட்டு  வருகின்றனர்.

இந்நிலையில், 7-ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரையில் தீவிரம் காட்டி வரும் பிரதமர் நரேந்திரமோடி, உத்தரப்பிரதேசம் மாநிலம் குஷிநகரில் நடைபெற்ற  பாஜக தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். அப்போது, பாரதிய ஜனதா கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற மக்கள்  ஆவலோடு இருப்பதை அறிவதாக பிரதமர் தெரிவித்தார். இந்த வகையில், தன் மீதும், தனது அரசின் மீதும், நாளுக்கு, நாள் மக்களின் நம்பிக்கை  அதிகரித்து வருவதால், எதிர்க்கட்சிகள் பெரும் கலக்கத்தில் ஆழ்ந்திருப்பதாக, மோடி குறிப்பிட்டார்.

நிலையான, நேர்மையான மற்றும் தீர்க்கமான அரசு அமைவதற்காக, இந்திய தேசம் வாக்களித்துக் கொண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி  தெரிவித்தார். வாக்களிப்பதற்கு உரிமை பெற்ற ஒவ்வொரு வாக்காளரின் வாக்குகளும், தமக்கு மிகவும் முக்கியமானது என பிரதமர் கூறினார்.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், நமது ராணுவ வீரர்களுக்கு, முன்னால், வெடிகுண்டுகளோடும், துப்பாக்கிகளோடும் தீவிரவாதிகள் நிற்பதாக பிரதமர்  தெரிவித்தார். அப்போது, அவர்களை தாக்கி அழிக்க, தேர்தல் ஆணையத்திடம் சென்று, நமது ராணுவ வீரர்கள் அனுமதி கேட்க வேண்டுமா? என்றார். ஒருவேளை எதிர்க்கட்சிகள், தேர்தல் ஆணையத்திடம் சென்று அனுமதி வாங்குமாறு கூறுவார்களோ? என்றும் பிரதமர் நரேந்திர மோடி  வினவியிருக்கிறார்.

Related Stories: