புத்த பூர்ணிமா தினத்தன்று இந்தியாவில் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டம்... மத்திய உளவுத்துறை எச்சரிக்கை

டெல்லி: புத்த பூர்ணிமா தினத்தன்று இந்தியாவில் ஜமாத் உல் முஜாகிதீனோ, ஐ.எஸ். தீவிரவாத அமைப்போ தற்கொலை படை தாக்குதல் நடத்தக்கூடும் என்று மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. புத்த மதத்தை தோற்றுவித்த கௌதம புத்தரின் பிறந்தநாளான புத்த பூர்ணிமா மே மாத பௌர்ணமி நாளன்று உலகில் உள்ள அனைத்து பௌத்தர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும். பலவித சமய நிகழ்வுகள் இந்நாளில் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை முன்னிறுத்தி இடம்பெறும்.

இதனை முன்னிட்டு புத்த பூர்ணிமா வடமாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்நிலையில் புத்த பூர்ணிமா தினத்தன்று இந்தியாவில் ஜமாத் உல் முஜாகிதீனோ, ஐ.எஸ். தீவிரவாத அமைப்போ தற்கொலை படை தாக்குதல் நடத்தக்கூடும் என்று மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் எதிரொலியாக மாநிலம் முழுவதும் உச்சகட்ட மாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இந்து மற்றும் புத்த கோயில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்கு வங்கம் மற்றும் வங்க தேசத்தில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

உளவுத்துறையின் எச்சரிக்கையை பெரிதாக எடுத்துக் கொள்ளாததால் இலங்கையில் மிகப்பெரிய தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியதாக சுட்டிக் காட்டியுள்ள அதிகாரிகள், தாங்கள் உச்சக்கட்ட உஷார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Related Stories: