ஐ.நா.வின் போக்குவரத்து தடையை மீறி நடைபெற்றதால் வடகொரியா கப்பலை கைப்பற்றியது அமெரிக்கா

வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையிலான உறவு மீண்டும் மோசமடைந்துள்ளது. வடகொரியாவிடம் அணு ஆயுத சோதனைகளை முழுமையாக கைவிடவேண்டும் என்று தொடர்ந்து அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஆனால் அதனை கண்டுக்கொள்ளாமல் குறுகிய தொலைவு சென்று தாக்கக்கூடிய பல ஏவுகணைகளை சோதனையை வடகொரியா நடத்தியது. இந்த செயல் அமெரிக்காவை அதிரவைத்தது. எங்கள் நாட்டின் மீது உள்ள பொருளாதார தடைகள் உள்ளிட்ட பல சர்வதேச தடைகளில் இருந்து விலக்கு மற்றும் நிவாரணம்  வேண்டும் என்று வடகொரியா கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக பிப்ரவரியில் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் சந்தித்து பேசினர். இந்த் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனால் இரு நாட்டுக்கும் இடையே உள்ள உறவு மீண்டும் மோசமடைந்துள்ளது.  மீணடும் நேற்று முன்தினம் வடகொரியா 2 ஏவுகணைகள் சோதனை நடத்தியுள்ளது. அணு ஆயுத பேச்சுவார்த்தையில் தங்களுக்கு சலுகைகள் வழங்க அமெரிக்காவுக்கு அழுத்தம் தரவே வடகொரியா இந்த சோதனைகளை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சோதனைகளால் யாருக்கும் மகிழ்ச்சி இல்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார். வடகொரியாவின் சரக்கு கப்பலை அமெரிக்க கைப்பற்றியுள்ளது. நிலக்கரியை கொண்டு செல்ல இந்த கப்பல் பயன்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும்  ஐ.நா.வின் போக்குவரத்து தடையை மீறி நடைபெறுவதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே வைஸ் ஹானஸ்ட் கப்பல் இந்தோனேசியாவில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று இந்தோனேசியா தற்போது வடகொரியாவின் வைஸ் ஹானஸ்ட் சரக்கு கப்பலை அமெரிக்காவிடம் ஒப்படைத்துள்ளது. இந்த கப்பலை கைப்பற்றியதற்கும், தற்போது வடகொரியா ஏவுகணை சோதனைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: