திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்: பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்

திருமலை: திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டத்தை கண்ட பக்தர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். திருமலையில் இருந்து திருப்பதி நோக்கி செல்லக்கூடிய முதலாவது மலைப்பாதையில் நேற்றுமுன்தினம் இரவு வாகனங்கள் செல்லும் இடமும், பக்தர்கள் நடந்துவரும் வழியும் அமைந்துள்ள மோக்கால மெட்டு என்ற இடத்தில் வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை சாலையோரத்தில் உள்ள தடுப்பு சுவர் மீது அமர்ந்திருந்தது.

இதனை அவ்வழியாக சுவாமி தரிசனம் செய்துவிட்டு வந்த பக்தர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் இதுகுறித்து உடனடியாக திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் சைரன் அடித்து சிறுத்தையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இதனால் அங்கு சுமார் அரைமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்ற பிறகும் பக்தர்கள் தனியாக செல்ல வேண்டாம் எனவும் கூட்டமாகச் செல்லும் படியும் தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

Related Stories: