குடும்ப வன்முறை புகாரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாரதிக்கு எதிரான வழக்கு ரத்து: மனைவியுடன் சேர்ந்து வாழ்வதால் நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: குடும்ப வன்முறை புகார் தொடர்பாக, ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாரதிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கினை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் முன்னணி தலைவர்களுள் ஒருவரான சோம்நாத் பாரதி, முன்னாள் சட்டத்துறை அமைச்சருமாவார். இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

இதனையடுத்து, சோம்நாத் பாரதி மீது அவரது மனைவி லிபிகா நீதிமன்றத்தில் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடர்ந்தார். அதோடு, கடநத 2015ம் ஆண்டு ஜூன் 10ம் தேதி டெல்லி மாநில பெண்கள் ஆணையத்திலும் லிபிகா புகார் அளித்தார். இந்நிலையில், சோம்நாத் பாரதி தனது மனைவியுடன் சமாதானமாக போக விரும்பினார். இதற்கு அவரது மனைவியும் சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து , கணவர் சோம்நாத் பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி தாக்க செய்த மனுவை அவரது மனைவி திரும்ப பெற நீதிமன்றத்தை அணுகினார. அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இந்நிலையில், கணவன் , மனைவியாக இருவரும் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதால், சோம்நாத் பாரதிக்கு எதிராக அவரது மனைவி தாக்கல் செய்த வழக்கினை ரத்து செய்ய அனுமதி வழங்கி நீதிபதி சந்தர் ஷேகர் உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: