திருச்செந்தூர் முருகன் கோவிலில் கர்நாடக முதல்வர் குமாரசாமி, முன்னாள் பிரதமர் தேவகவுடா சாமி தரிசனம்

தூத்துக்குடி: முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அவரது மகன் கர்நாடக முதல்வர் குமாரசாமி திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்ற தமிழ் கடவுளான முருகனுக்குரிய அறுபடை வீடுகளில் இரண்டாம் படை எனப் போற்றப்படும் மிகச் சிறப்புமிக்க கோயிலாகும். இது தேவார வைப்புத்தலமாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், கர்நாடக முதல்வர் குமாரசாமி, அவரது தந்தையும் மதச்சார்ப்பற்ற ஜனதா தளத்தின் தேசிய தலைவருமான தேவ கவுடா ஆகியோர், திருச்செந்தூர் முருகன் கோவில் இன்று சாமி தரிசனம் செய்தனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்த இருவரும், அங்கிருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலை வந்தடைந்தனர். அங்கு இருவருக்கும் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.  

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: