குமரி மருத்துவக்கல்லூரியில் விஷப்பாம்பு: தீயணைப்பு துறையினர் பிடித்து சென்றனர்

நாகர்கோவில்: ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள மன நோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு வெளியே நேற்று மதியம் 12 மணியளவில் பாம்பு ஒன்று சுருண்ட நிலையில் கிடந்தது. இதை பார்த்த மருத்துவமனை பணியாளர்கள் உறைவிட மருத்துவர் டாக்டர் ஆறுமுகவேலனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் தீயணைப்பு துறையினரிடம் புகார் அளித்தார். தீயணைப்பு அலுவலர் பென்னட்ராஜ் தலைமையில் வந்த தீயணைப்பு துறையினர் அந்த பாம்பை பிடித்து சென்றனர். பாம்பை பார்த்த மருத்துவமனை பணியாளர்கள் சிலர், அதை நைசாக பிளாஸ்டிக் கவரில் பிடித்து சுற்றி வைத்து இருந்தனர். அதை பெற்று சென்ற தீயணைப்பு துறையினர் வனத்துறையிடம் ஒப்படைக்க உள்ளதாக கூறினர். இந்த பாம்பு கொடிய விஷ தன்மை கொண்ட அனலி வகையை சேர்ந்தது என்றும், இது கடித்தால் உயிர் தப்புவது கடினம் என்றும் தீயணைப்பு துறையினர் கூறினர். அதிர்ஷ்டவசமாக பாம்பு சிகிச்சை வார்டுகளுக்குள் செல்ல வில்லை. இதுவே இரவு நேரமாக இருந்திருந்தால், யாரும் கவனித்திருக்க மாட்டார்கள் என்று மருத்துவ பணியாளர்கள் கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: