ஊட்டி கோர்ட்டில் சயான், மனோஜ் ஆஜர்

ஊட்டி: ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக கோவையை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். ஜாமீனில் இருந்த சயான்  மற்றும் மனோஜ் ஆகியோர் டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்நிலையில், ஜாமீனில் இருந்த போது  சயான் மற்றும் வாளையர் மனோஜ் ஆகியோர் ஊட்டியில் உள்ள ஒரு லாட்ஜ் பெண் உரிமையாளரை மிரட்டியதாக பி1 காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது. இவ்வழக்கின் விசாரணை நேற்று ஊட்டியில் உள்ள நீதித்துறை நடுவர் மன்றத்தில்  நடந்தது. இதற்காக சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் கோவை சிறையில் இருந்து ஊட்டிக்கு அழைத்துவந்து ஆஜர்படுத்தப்பட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: