நாடு முழுவதும் எம்பிபிஎஸ்/பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு தொடங்கியது: 15 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்

சென்னை: நாடு முழுவதும் எம்பிபிஎஸ்/பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு தொடங்கியது. நாடு முழுவதும் 155 நகரங்களில் இதற்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு எழுத 15 லட்சத்துக்கும்  மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டுகளில் காலையில் நீட் தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், வெளியூரில் இருந்து வந்த மாணவர்கள் தேர்வு மையத்திற்கு சென்று சேர்வதில் ஏற்படும் சிரமம் காலதாமதத்தை தவிர்க்க  இந்த ஆண்டு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நீட் தேர்வு நடத்தப்படுகிறது. மாணவர்கள் நீட் தேர்வு எழுதும் மையத்துக்குள் பிற்பகல் 1.30 மணிக்குள் வந்து சேர வேண்டும். காலை 11.30 மணிக்கு தேர்வு மையம்  திறக்கப்பட்டது. தேர்வர்கள் 12.30 மணிக்கு வரும் பட்சத்தில் பாதுகாப்பு சோதனைகளை முடித்துவிட்டு எந்த வித இடர்பாடும் இன்றி தேர்வறைக்கு சென்றனர்.

பிற்பகல் 1.30 மணிக்கு மேல் வரும் மாணவர்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 18 நகரங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.  அதற்கடுத்தபடியாக தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, சேலம், மதுரை உள்பட 14 நகரங்களில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.  சென்னை நகரில் 31 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. கேகே நகரில் உள்ள கேந்திர  வித்யாலயா, சேத்துப்பட்டில் உள்ள மகரிஷி வித்யா மந்திர்பள்ளி, ஆதம்பாக்கத்தில் உள்ள டிஏவி பள்ளி, கல்லூரிகளும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பஸ் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. வழக்கம் போல  உடை கட்டுப்பாடு தேர்வு மையத்துக்குள் செல்ல பல்வேறு கட்டுப்பாடு, தடை விதிக்கப்பட்டது. எவை எவை தடை செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த பொருட்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படும் என ஒரு பெரிய பட்டியலையே நேசனல்  டெஸ்டிங் ஏஜென்சி அறிவித்துள்ளது. அணிகலன்கள், உணவுப்பொருட்கள், எழுதுபொருட்கள் என எதையும் எடுத்து வரக்கூடாது.

தேர்வின்போது பயன்படுத்துவதற்கான பால்பாயின்ட் பேனா தேர்வறையிலேயே வழங்கப்படும். தேர்வு எழுத வருபவர் மேலாடை அரைக்கை உடையதாக இருக்க வேண்டும். முழுக்கை உடைய மேலாடை அணிந்தவர்கள் தேர்வு எழுத  அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஷூ அணிந்து வரக்கூடாது, ஸ்லிப்பர் செருப்பு அணிந்து வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான கூடுதல் விவரங்களை www.nta.ac.in, www.ntaneet.ac.in ஆகிய இணையதளங்களில்  அறிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆங்கில வினாத்தாளே இறுதியானது நீட் தேர்வு வினாத்தாளில் மொழிபெயர்ப்பில் ஏதேனும் பிரச்னை இருப்பின் ஆங்கில வினாத்தாளே இறுதியானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால்  தமிழில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள், கேள்வியில் தவறு இருப்பதாக கருதும்பட்சத்தில், ஆங்கிலத்தில் உள்ள கேள்வியையும் படித்துவிட்டு பதிலளிப்பது நல்லது என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: