பார்க்கிங்குக்கு ஜிஎஸ்டி பில்டர்களுக்கு தடை

புதுடெல்லி: வீடு வாங்கும் மக்களுக்கு உதவும் வகையில் ஜிஎஸ்டி வரியை அரசு குறைத்துள்ளது. தேர்வு செய்யப்படும் இடம், குடியிருப்புகளில் கார் பார்க்கிங் வசதி ஆகியவற்றை கட்டுமான சேவைகளுடன் சேர்த்து கொள்ள  வேண்டும். கட்டுமானத்திற்கு விதிக்கப்படும் அதே அளவில்தான் ஜிஎஸ்டி வரி வசூல் செய்ய வேண்டும். கூடுதலாக வசூல் செய்யக்கூடாது என்று மேற்குவங்கத்தில் ஆணை பிறப்பிக்கும் அதிகாரம் படைத்த ஆணையம் (ஏஏஆர்)  உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து, பில்டர்கள், குறைந்த விலை வீடுகளில், சேவைகளுக்கு 5 சதவீதம் அளவிற்கும் மற்றவர்களுக்கு 8 சதவீதம் என்ற அளவிற்கும் ஜிஎஸ்டி வசூல் செய்கிறார்கள். முன்னணி பில்டர்கள் உள்பட பல  பில்டர்கள் இதற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வசூல் செய்கிறார்கள்.கட்டுமானத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியில் சலுகையை அரசு அறிவித்துள்ளது. இதனால், வீடு வாங்குவோருக்கு சிறிது நிதி சுமை குறையும் என்று பிலட்ர்கள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: