பொறியியல் சேர்க்கைக்கு ஆன்லைனின் இன்று 15,000 மாணவர்கள் பதிவு: தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம்

சென்னை: பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவின் முதல் நாளான இன்று, 15 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தகவல் தெரிவித்துள்ளது. இன்ஜினியரிங் கவுன்சலிங்கில் பங்கேற்பதற்கு இணையத்தில் இன்று முதல் மே 31 தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 2019-20ம் கல்வியாண்டிற்கான இன்ஜினியரிங் கவுன்சலிங்கில் பங்கேற்பதற்கு இணையத்தில் விண்ணப்பித்தல் இன்று தொடங்கியது.  அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு முதல்முறையாக இணையதள வழி கலந்தாய்வை நடத்தியது. அண்ணாபல்கலைக்கழகம், உயர்கல்வித்துறை இடையேயான கருத்து முரண்பாட்டால், இந்த ஆண்டு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் இன்ஜினியரிங் கவுன்சலிங்கை நடத்துகிறது. இந்த ஆண்டு கவுன்சலிங்குக்கு வீட்டில் இருந்தபடியும், 42 இன்ஜினியரிங் கவுன்சலிங் உதவி மையங்களில் இருந்தும் இணையதளத்தில் (www.tndte.gov.in, www.tneaonline.in) விண்ணப்பித்தல் இன்று காலை தொடங்கியது. மே 31 கடைசி நாளாகும்.

ஜூன் 3ம் தேதி ரேண்டம் எண் வெளியிப்படும். ஜூன் 6ம் முதல் 11ம் தேதி வரை சான்று சரிபார்க்கும் பணி நடக்கும். ஜூன் 17ம் தேதி கவுன்சலிங்கில் பங்கேற்க தகுதியுள்ள மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல்(ரேங்க்) வெளியிடப்படும். ஜூன் 20ம் தேதி சிறப்பு பிரிவு(மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு வீரர்கள்) கலந்தாய்வு தொடங்கும். பொதுப் பிரிவினருக்கான கவுன்சலிங் ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது. 5 கட்டங்களாக பிரிக்கப்பட்டு ஆன்லைனில் பொதுப்பிரிவு கவுன்சலிங் நடைபெறும். ஜூலை 30ம் தேதிக்குள் இன்ஜினியரிங் கவுன்சலிங்கை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்க தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: