குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் 12 குழுக்கள் அமைத்து விசாரணை

ஈரோடு : குழந்தை விற்பனை தொடர்பாக பெண் தரகர் அமுதா என்பவர், பேசிய ஆடியோ, பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமுதா என்ற பெண்ணிடம் ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது குழந்தை விற்பனையில் மேலும், பலர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அமுதாவும் அவரது கணவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டிருப்பதாகவும்  போலீசார் தெரிவித்துள்ளனர்.

விசாரணையில் 4 குழந்தைகளை விற்றதாக வாக்குமூலம்

செவிலியர் பர்வீன், அமுதாவிடம் இருந்து 4 குழந்தைகளை வாங்கி விற்றதாக வாக்குமூலர் அளித்துள்ளார். விசாரணையில் அமுதாவிடம் இருந்து 4 குழந்தைகளை வாங்கி மதுரை, திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் விற்பனை செய்ததாக போலீசிடம் பர்வீன் தகவல் தெரிவித்தார். மதுரையில் இரண்டு, திருச்சி, நாமக்கல்லில் தலா ஒரு குழந்தைகளை விற்று உள்ளனர். குழந்தை விற்பனை தொடர்பாக அமுதவல்லி, அவரது கணவர் ரவிச்சந்திரன், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், செவிலியர் பர்வீன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

12 குழுக்கள் அமைத்து விசாரணை

இந்நிலையில் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் 12 குழுக்கள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராசிபுரத்தில் கடந்த 2 ஆண்டுகளில் பிறந்த 4,800 குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்களை சரிபாக்க 10 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. ஒரு மருத்துவர் தலைமையில் 10 பேர் கொண்ட 10 குழுக்கள் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கொல்லிமலையில் வீட்டில் பிறந்த குழந்தைகள், தத்துகொடுத்த குழந்தைகள் குறித்து விசாரிக்கவும் 5 நபர்கள் கொண்ட 2 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. குழந்தைகளை வாங்கி விற்ற அமுதா, ரூ.70ஆயிரத்திற்கு பிறப்புச்சான்றிதழை வாங்கித்தருவதாக கூறியிருக்கிறார். இந்நிலையில் கொல்லிமலை பகுதியில் வழங்கப்பட்ட சுமார் 1000 பிறப்புச்சான்றிதழ்களை ஆய்வுசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: