பஞ்சாப் வங்கியில் 13,000 கோடி மோசடி லண்டன் சிறையில் இன்று நீரவ் மோடியிடம் விசாரணை

லண்டன்; பஞ்சாப் நேஷனல் வங்கியில் ₹13,000 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் கைதாகி லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நீரவ் மோடியிடம் இன்று விசாரணை நடக்கிறது. இந்தியாவை சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ₹13 ஆயிரம் கோடி கடன் பெற்றார். அந்த பணத்தை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துவிட்டு இங்கிலாந்துக்கு தப்பியோடிய அவர், கடந்த  மாதம் அங்கு கைது செய்யப்பட்டார். அங்குள்ள வெஸ்ட் மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், வாண்ட்ஒர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஜாமீன் கோரி நீரவ் மோடி தாக்கல் செய்த  மனுவை கடந்த மாதம் 29ம் தேதி வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், அவர் மீதான விசாரணை ஏப்ரல் 26ல் நடைபெறும் எனவும் நீதிமன்றம் அறிவித்தது. இதன்படி, இந்த வழக்கு இன்று மீண்டும்  விசாரணைக்கு வருகிறது. அப்போது, சிறையில் உள்ள நீரவ் மோடியிடம்  வீடியோ கான்பரன்சில் விசாரணை நடத்தப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: