தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

சென்னை: வரும் மே மாதம் 19ம் தேதி அன்று தமிழகத்தில் நடைபெறவுள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்றது. ஆனால், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளிலும் வழக்கு நிலுவை இருந்ததால் அங்கு தேர்தல் நடத்தப்படவில்லை. இதனிடையே சூலூர் தொகுதி எம்எல்ஏ கனகராஜ் கடந்த மாதம் மரணமடைந்தார்.இதையடுத்து இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

Advertising
Advertising

மேற்கண்ட 3 தொகுதிகள் மீதான வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டன. இதையடுத்து இந்த 4 தொகுதிகளுக்கும் 7வது கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் நாளான மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் கடந்த 22ம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், திமுக, அமமுக, அதிமுக ஆகிய கட்சிகள் இந்த 4 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தனர். அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் குறித்து அக்கட்சி தலைமை வெளியிட்டுள்ள பட்டியல் பின்வருமாறு..

1 சூலூர் தொகுதியில் வெ.விஜயராகவன்,

2 அரவக்குறிச்சி தொகுதியில் பா.க. செல்வம்,

3 திருப்பரங்குன்றம் தொகுதியில் ரா.ரேவதி

4 ஒட்டப்பிடாரம் தொகுதியில் மு.அகல்யா

ஆகியோர் போட்டியிடுவதாக நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: