பாகிஸ்தான் மீதான தாக்குதல் குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்களை கேட்டு சோர்வடைந்துவிட்டோம் : ப.சிதம்பரம் ட்வீட்

சென்னை : மக்களவை தேர்தல் 3 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் மோடியின் பிரசாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் ட்விட்டரில் கடுமையாக சாடியுள்ளார். பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்த பிரதமர் மோடியின் தற்பெருமை பேச்சுக்களை கேட்டு சோர்வடைந்துவிட்டதாக ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் பிரசாரம் முடிவதற்கு முன்பாவது பிரதமர் மோடி முக்கியமான மக்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசுவாரா என கேள்வி எழுப்பியுள்ள அவர், நாட்டில் இப்போது வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்சினை மற்றும் அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பு தான் முக்கிய பிரச்சினைகள் என்றும், இந்த பிரச்சனைகள் குறித்து பிரதமர் பேசாமல் அமைதியாக இருப்பது ஏன் என கேட்டுள்ளார்.

Advertising
Advertising

ரூபாய் நோட்டு விவகாரம், குழப்பம் நிறைந்த ஜிஎஸ்டி, சிறு குறு தொழில்களின் அவலநிலை குறித்து பிரதமர் மோடி பேச வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். பண மதிப்பு நீக்கம், வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான பேச்சுக்கள், குறிப்பாக பாஜகவை சேர்ந்தவர்களின் வெறுப்புணர்வு பேச்சுகள் தொடர்பாக பிரதமர் தனது கருத்தை தெரிவிக்க வேண்டும் என மக்கள் விரும்புவதாகவும், மக்களை பாதிக்கும் முக்கிய விஷயங்கள் குறித்து தேர்தல் முடியும் முன்னராவது பிரதமர் பேசுவார் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: