பிரக்யாவுக்கு சீட் ஒதுக்கியதன் மூலம் பிரிவினையை உண்டாக்குகிறது பாஜ: மபி முதல்வர் கமல்நாத் குற்றச்சாட்டு

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் களமிறக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த 2008ம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள பிரக்யா தாகூரை, போபால் தொகுதி வேட்பாளராக பாஜ அறிவித்தது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இதுதொடர்பாக முதல்வர் கமல்நாத் கூறியபோது, ``மக்களிடையே பிரிவினையை உண்டாக்குவதையே பாஜ செய்து வருகிறது. இதை மக்கள் அறிந்திருக்கிறார்கள் என்பதை பாஜ இன்னும் உணரவில்லை. அவர்களுக்கு வேறு வேட்பாளர் கிடைக்கவில்லை. எனவே, அரசியல் பின்னணியும் எவ்வித பொதுச்சேவையிலும் தொடர்பில்லாத பிரக்யா தாகூர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். மதத்தின் பெயரால் மக்களிடையே பிரிவினை உண்டாக்கவே அவர் களமிறக்கப்பட்டுள்ளார். வேலைவாய்ப்பு, விவசாயிகள், சிறுவணிகர்கள் போன்ற எது குறித்தும் அவர்களால் பேச முடியாது. அதனால்தான், இது போன்று மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில், பிரிவினையை உண்டாக்க பாஜ முயற்சிக்கிறது’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: