நடிகர்களின் சுயமரியாதை, பாதுகாப்புக்கு சிறப்புக்குழு

சென்னை: நடிகர்களின் சுயமரியாதை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர், நடிகைகளின் சுயமரியாதை, பொதுவாழ்வு மதிப்பீடு மற்றும்  சுய கவுரவம் ஆகியவற்றின் பாதுகாப்பு கருதி, தென்னிந்திய நடிகர் சங்கம்  சிறப்புக்குழு அமைத்துள்ளது. இதன்மூலம் நடிகர்,   நடிகைகளின் சுயமரியாதைக்கு மதிப்பளிக்கும் வகையில் நடவடிக்கைகள்   மேற்கொள்ளப்படும்.இதுகுறித்த ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது. குழு அமைப்பாளர்களான நடிகர் சங்க செயற்குழு  உறுப்பினர்கள் பூச்சிமுருகன், லலிதாகுமாரி, நடிகைகள் சுகாசினி, ரோகிணி, நடிகர்  கிட்டி, பொருளாளர் நடிகர் கார்த்தி, வழக்கறிஞர் கிருஷ்ணா ரவீந்திரன் கலந்துகொண்டனர்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: