பிஇ, பிடெக் படிப்புகளுக்கு மதிப்பெண் எவ்வளவு? தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு

சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 19ம் தேதி வெளியானதை அடுத்து, பொறியியல் படிப்புக்கான கவுன்சலிங்கை அண்ணா பல்கலைக் கழகம் நடத்தாது என்று தெரிவித்ததை அடுத்து, தொழில் நுட்பக் கல்வி கழகம் நடத்தும் என்று அரசு உத்தரவிட்டது. இதற்கான விண்ணப்பம், ரேங்க் பட்டியல் வெளியீடு, கவுன்சலிங் தேதிகளை தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்தது.

கடந்த ஆண்டு வரை நடைமுறையில் இரு்ந்து வந்த குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களில் மாற்றம் செய்து உயர் கல்வித்துறை கடந்த பிப்ரவரி 26ம் தேதி அரசாணை வெளியிட்டது. கடந்த ஆண்டுவரை பொறியியல் சேர்க்கைக்கு கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும் பாடங்களில் ஓசி பிரிவினருக்கு சராசரி மதிப்பெண்கள் 50 சதவீதம், பிசி, பிசிஎம் பிரிவினருக்கு 45 சதவீதம், எம்பிசி பிரிவினருக்கு 40 சதவீதம், எஸ்சிஏ, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 35 சதவீதம் இருக்க வேண்டும் என்ற விதி இருந்தது.

இந்த மதிப்பெண்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்று தொழில் நுட்பக் கல்வி இயக்குநர் அரசுக்கு எழுதிய கடிதத்தை ஏற்றுக் கொண்ட உயர்கல்வித்துறை கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி குறைந்தபட்ச மதிப்பெண்கள் குறித்து அரசாணை வெளியிட்டது. அதில், ஓசி பிரிவினர் 45 சதவீதமும், இதர பிரிவினரான பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி ஆகிய பிரிவினருக்கு 40 சதவீதம் மதிப்பெண்கள் இருக்க வேண்டும் என கூறப்பட்டது.

இந்த நிலையில்,  தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நடப்பு 2019-2020 கல்வி ஆண்டில் பிஇ, பிடெக் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை நடப்பதை அடுத்து,மாணவர்களுக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் பொதுப்பிரிவினருக்கு 45 சதவீதம் என்றும், மற்ற அனைத்து பிரிவினருக்கும் 40 சதவீதம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளது. இதை அடிப்படையாக கொண்டு இந்த ஆண்டுக்கான பொறியியல் கவுன்சலிங் நடக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: