கட்டிடக்கலை, திட்ட உதவியாளர் பதவி மூலச்சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்: தற்காலிக தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி உத்தரவு

சென்னை: கட்டிடக்கலை, திட்ட உதவியாளர் பதவிக்கு தற்காலிமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் மூலச் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு:தமிழ்நாடு நகர் மற்றும் கிராம அமைப்பு திட்டங்களுக்கான சார்நிலைப் பணிகளில் அடங்கிய கட்டிடக்கலை உதவியாளர், திட்ட உதவியாளர் பதவிக்கான(2007-2015ம் ஆண்டுக்கானது) இரண்டாம் கட்ட சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு  தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்  பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் இரண்டாம் கட்ட சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்காக வருகிற 25ம் தேதி முதல் மே 6ம் தேதி மாலை 5.30 மணிக்கு முன்னர் தங்களது மூலச் சான்றிதழ்களை ஸ்கேன்  செய்து தேர்வாணைய இணைய தளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை குறிப்பிட்ட நாளுக்குள் பதிவேற்றம் செய்யவில்லை எனில் அவ்விண்ணப்பதாரருக்கு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள விருப்பமில்லை எனக் கருதி அவர்களது விண்ணப்பம் பரிசீலனைக்கு  எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: