சீன தலைநகரான பெய்ஜிங்கில் பெல்ட் அண்ட் ரோடு என்ற பொருளாதார உச்சிமாநாடு வரும் 25-ம் தேதி தொடக்கம்

பெய்ஜிங்கில்: சீன தலைநகரான பெய்ஜிங்கில் பெல்ட் அண்ட் ரோடு என்ற பொருளாதார உச்சிமாநாடு வரும் 25-ம் தேதி தொடங்குகிறது. இதில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். ஆனால் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வர்த்தக மண்டலம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்துவிட்டு இந்த மாநாட்டை இந்தியா புறக்கணித்துள்ளது. இருப்பினும் சீனாவின் அழைப்பை ஏற்று இந்திய வெளியுறவுத் துறை செயலர் விஜய் கோகலே சீனா சென்றுள்ளார். இன்று அவர் சீன வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து மசூத் அசார் விவகாரம் உள்பட பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து பேச்சு நடத்த உள்ளார்.

ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் பட்டு வர்த்தகப் பாதை அமைத்துள்ள சீனா தனது உற்பத்திப் பொருட்களை உலக சந்தையில் விற்பதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது. ஆனால் தரமற்ற பொருட்களை திணித்து பல நாடுகளை கடனாளியாக்குவதாக சீனா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: